சென்னையில் தங்கம் விலை இன்று கிராம் ரூ.31 ரூபாயும், பவுனுக்கு ரூ.248-ம் உயர்ந்து இருக்கிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ4.823-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ4,854ஆக உயர்ந்து விட்டது. பவுன் ரூ38 ஆயிரத்து 584-ல் இருந்து ரூ38 ஆயிரத்து 832 ஆக அதிகரித்து இருக்கிறது.
இன்று ஒரே நாளில் கிராம் ரூ.31 ரூபாயும், பவுன் ரூ.248-ம் உயர்ந்து இருக்கிறது.
இதே போல் வெள்ளி விலையும் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கிராம் ரூ.72.80-ல் இருந்து ரூ.73.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,800-ல் இருந்து 73,800 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.
தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கினாலும் நகை வாங்கும் பெண்கள் நகைகடைகளில் அதிகம் காணப்படுகிறது.