உத்தரகண்ட் சட்டசபையில் பெண் சபாநாயகர்..

Published:

உத்தரகண்ட் சட்டசபைக்கு முதல் பெண் சபாநாயகராக ரிது கந்துாரி(57 )போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ. கஆட்சி நடக்கிறது. இங்கு சமீபததில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ க வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. சபாநாயகருக்கான தேர்தல் நேற்று நடந்தது. பா.ஜ.கசார்பில் ரிது கந்துாரி, வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை.

இதையடுத்து, ரிது கந்துாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தற்காலிக சபாநாயகர் பன்ஷிதர் பாகத் அறிவித்தார்.உத்தரகண்ட் சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றுள்ள ரிது, கோட்வார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். ரிதுவின் தந்தை மேஜர் ஜெனரல் புவன் சந்திர கந்துாரி, 88, ராணுவத்தில் பணியாற்றியவர்.ஓய்வு பெற்ற பின், பா.ஜ.கவில் இணைந்த கந்துாரி, இரு முறை உத்தரகண்ட் முதல்வராகவும், கார்வால் தொகுதி லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
Tamil News large 2992986 - 2026

Related articles

Recent articles

spot_img