2022 ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது நமித் மல்கோத்ரா பெற்றுள்ளார்..

Published:

2022 ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கோலாகலமாக நடந்தது. சிறந்த நடிகருக்கான விருதினை வில் ஸ்மித் வென்றார்.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது டியூன் படத்திற்காக நால்வரில் இந்தியரான சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்திலும் பணியாற்றியுள்ள
நமித் மல்கோத்ரா பெற்றுள்ளார்.

images 2022 03 28T185458.947 - 2026
gallerye 083224609 2993862 - 2026
gallerye 110405738 2993893 - 2026

இன்றயை விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சிறந்த துணை நடிகருக்கான விருதினை டிராய் கோட்சர் பெற்றார்.
சிறந்த துணை நடிகை விருதினை அரியானா டிபோஸ் வென்றார் ‛என்கான்டோ’ படத்திற்கு சிறந்த அனிமேஷன் விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடலுக்கானா விருதை ஜேமஸ்பாண்ட் நடத்த “நோ டைம் டூ டை ” க்குகிடைத்துள்ளது.
கிங்ரிசர்டு திரைப்படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.தி பவர் ஆப் தி டாக் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக ஜேம் கேம்பியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். தி ஐஸ் ஆப் டாமி பயே என்ற திரைப்படத்தில் நடித்த ஜெஸ்சிகா சாஸ்டெய்ன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோடா என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ தட்டிச் சென்றது .பைரன் ஹோவார்ட் மற்றும் ஜேம்ஸ் புஷ் இணைந்து இந்த படத்தை இயக்கி இருந்தனர்.

ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன், லூகா, ஃப்ளீ, தி மிட்செல் vs தி மெஷின்ஸ் உள்ளிட்ட படங்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் டியூன் திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை டியூன் படத்திற்காக கிரேக் ஃபிரேசர் வென்றார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை டியூன்
படத்திற்காக 5 பேர் பெற்றுக்கொண்டனர்..

மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது டியூன் படத்திற்காக 4 பேர் பெற்றுக்கொண்டனர்.இந்த நால்வரில் நமித் மல்கோத்ரா என்னும் இந்தியரும் ஒருவர். லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இவரது நிறுவனம், டியூன் படத்திற்கு விஷூவல் எபெக்ட்களை செய்துள்ளது. இவரது நிறுவனம் வாங்கும் 7வது ஆஸ்கர் விருது இதுவாகும்.

இவர் சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்திலும் பணியாற்றி உள்ளார். பாலிவுட்டில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்திரா படத்துக்கும் இவரது நிறுவனம் தான் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி குறித்து நக்கலாக பேசிய தொகுப்பாளரின் கன்னத்தில் அடித்த சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து நகைச்சுவைக்காக கிண்டலாக கிறிஸ் ராக் பேசினார்.

ஜிஐ ஜேன் என்னும் திரைப்படத்தில் ராணுவ வீராங்கனையின் தோற்றம் மொட்டை தலையுடன் இருபு்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும். இதனை குறிப்பிட்டு, ஜிஐ ஜேன் படத்தின் 2ம் பாகத்திற்காக ஜடா காத்திருப்பது போல அவரது தோற்றம் உள்ளது என கிறிஸ் பேசியதும் சற்றே கோபமான வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ் ராக்கை ஓங்கி பளார் என அறைந்தார். இது காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனாலும் கிறிஸ் கோபத்தை அடக்கி கொண்டு மீண்டும் நகைச்சுவையாக பேசினார். அலோபீசியா என்னும் நோயினால் முடியை இழந்து வருகிறார் ஜடா ஸ்மித். இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ் கிண்டல் செய்தது வில் ஸ்மித்தை கோபமடைய செய்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதனிடையே வில் ஸ்மித்தின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related articles

Recent articles

spot_img