ஜூலை 24 இல் குரூப் 4 தேர்வு ..

Published:

நாளை முதல் ஏப்ரல் 28வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும்.

குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.

ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார் என
டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

images 2022 03 29T173531.072 - 2026

Related articles

Recent articles

spot_img