மத்திய அமைச்சரவை இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 31 சதவீதம் பெறும் நிலையில், இனிமேல் 34 சதவீத அகவிலைப்படி பெறுவார்கள்.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9544.5 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.