திருப்பதி கோதண்டராமசாமி கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்..

Published:

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இன்று சின்னஷேச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா
நேற்று காலை 9.15 மணியில் இருந்து காலை 9.45 மணிக்குள் விருஷப லக்னத்தில் கங்கணப்பட்டர் ஆனந்தகுமார் தீட்சிதர் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

முன்னதாக கருட உருவம் வரைப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை கோவிலின் நான்கு மாடவீதிகளில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவிலில் வைத்து கொடிக்கும், கொடி மரத்துக்கும் அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து கொடியை, நாணல் கயிற்றுடன் இணைத்து, வேத பண்டிதர்கள் வேதமந்திரங்களை முழங்க, பக்தர்கள் ராமா.. ராமா.. எனப் பக்தி கோஷம் எழுப்ப கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலை 7.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணருடன் திருவீதி உற்சவம், காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணி வரை ஆஸ்தானம் நடந்தது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பெரிய சேஷ வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
IMG 20220331 WA0046 - 2026
IMG 20220331 WA0048 - 2026
IMG 20220331 WA0047 - 2026

Related articles

Recent articles

spot_img