மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,42,095 கோடி வசூலாகியதாக மத்திய நிதியமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கை: மார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,42,095 கோடி வசூல் ஆகியது.அதில்,
சிஜிஎஸ்டி ரூ.25,830 கோடி
எஸ்ஜிஎஸ்டி ரூ.32,378 கோடி
ஐஜிஎஸ்டி ரூ.74,470 கோடி இதில் பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடி அடங்கும்.
செஸ்- ரூ.9,417 கோடி ஆகும்.இதில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த 981 கோடி அடங்கும்.
கடந்த ஜனவரி மாதம் அதிகளவாக ரூ.1,40,986 கோடி வசூலாகி சாதனை படைத்தது. இதனை மார்ச் மாத வசூல் முறியடித்து ரூ.1,42,095 கோடி வசூலாகியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.