தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் சொத்து வரியை தமிழக அரசு
அதிரடியாக உயர்த்தியுள்ளது.100சதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.சொத்துக்கள் 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.
அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.
இந்த சொத்து வரி உயர்வு 4 வகைகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின் போது, குடியிருப்புகளின் பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில்குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சொத்து வரி உயர்வு ஏன்? என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் அடிப்படையில், வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில், சொத்து வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தக் காரணங்களின் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திமுக அரசு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசாக 150சதம் வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது .
இது ட்ரெய்லர் தான். இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது.
என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.