பெரம்பலூர் அருகில் இன்று கார் கவிழ்ந்து மூவர் பலி..

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
பெரம்பலூர் அருகில்
இன்று சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானர்.இருவர் பலத்த காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (45). இவர் திண்டுக்கல்லில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லதா (40). இவர்கள் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

லதாவின் தாய் வேம்பு (65), அண்ணன் திருவாரூரில் வசித்து வரும் ராமச்சந்திரன் (44), கமலக்கண்ணனின் சித்தியான கோவையை சேர்ந்த மணிமேகலை (65) ஆகியோருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து காரில் சென்னை புறப்பட்டனர்.

அங்கு மற்றொரு உறவினரை அழைத்துக்கொண்டு சாய்பாபா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டினார். இந்த நிலையில் அவர்கள் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம், நாரணமங்கலம் இடையே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் காரில் இருந்தவர்கள் அலறினர். இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது.

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

இந்த விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அவர்கள் மீட்க முயன்றனர். மேலும் இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

இதில் காரை ஓட்டி வந்த கமலக்கண்ணன், அவரது மனைவி லதா மற்றும் லதாவின் தாய் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ராமச்சந்திரன், மணிமேகலை ஆகியோர் மீட்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிகாலை நேரமாக இருந்ததால் டிரைவரின் கண் அயர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..
e660dd7181bcb4591e19135a396395c7 - 2026
615169b88d71f75948f893e63582c7e5 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories