விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் இன்று சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது. காவல்துறையினரை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அதிக அளவில் பட்டாசு தயாரிப்பில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில் பட்டாசு தொழிலில் பல்வேறு விதிகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படும் வேண்டும் என்று நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் அறிவிப்புகள் அறிவித்த நிலையில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பு ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து விஜயகரிசல்குளம் பகுதியில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் சோதனை செய்தபோது ரவிக்கண்ணன் (34) என்பவர் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய முற்பட்டனர். அப்போது விஜயகரிசல்குளம் கிராம பொதுமக்கள் ரவி கண்ணனை கைது செய்து அழைத்துச் செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டனர். போலீஸ் வாகனத்தை செல்லவிடாமல் சாலைகளில் குப்பை தொட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் மற்றும் வெம்பக்கோட்டை ஆய்வாளர் சுந்தரபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். அதன்பின்னர் காவல்துறையினர் ரவி கண்ணனை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் விஜயகரிசல்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவிக்கண்ணன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக விஜயகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் உள்பட 10 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.