கோயில் மதிற்சுவரை ஒட்டிய கடைகளை அகற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை தணிக்கை செய்ய வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தீ விபத்துக்குப் பின்னர் தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒதுக்கப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவில், பெரிய கோயில்களில் அமைந்துள்ள புராதன சிற்பங்கள், கட்டுமானங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கோயில்களில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெரிய கோயில் வளாகங்களின் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோயில்களுக்கு உள்ளே மற்றும் சுவரை ஒட்டி உள்ள கடைகளை அகற்ற வேண்டும்

பெரிய கோயில்களில் பாதுகாப்பு நடைமுறையை தணிக்கை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை தணிக்கை செய்ய வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து இத்தகைய உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.