சிதம்பரத்தில் துவங்கியது புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி விழா

5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பரத நாட்டியம், நாட்டிய நாடகங்கள், கதக், ஓடிசி, மணிப்புரி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, உள்ளிட்ட ஆடல்கள் மூலம்

சிதம்பரம்:

சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கோயில் தீட்சிதர்கள் சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்தப் பட்டு, இன்று மாலை இனிதே துவங்கியது.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வி. எஸ். டிரஸ்ட் வளாகத்தில் விழா துவங்கியது.

இரண்டு இடங்களிலும் 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பரத நாட்டியம், நாட்டிய நாடகங்கள், கதக், ஓடிசி, மணிப்புரி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, உள்ளிட்ட ஆடல்கள் மூலம் நடராஜ பெருமானுக்கு நடன கலைஞர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

நடனக் கலைக்கு நாயகனாகத் திகழ்பவர் ஆடல்வல்லானாம் நடராசப் பெருமான். பரத நாட்டிய முத்திரைகளுடன் ஆடற்கலையில் அரசனாகத் திகழும் நடராஜருக்கு நடன அஞ்சலி செலுத்துவது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இன்று சிவ ராத்திரியை முன்னிட்டு, இந்த நாட்டியாஞ்சலி விழா இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது.