1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அன்பில் மகேஷ் கூறுகையில், 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை. தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றார்.
