முஸ்லிம் உணர்வுகளை புண்படுத்துகிறதாம்: ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக போலீஸில் புகார்!

முஸ்லிம் உணர்வுகளை புண்படுத்துகிறதாம்: ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக போலீஸில் புகார்!

பிப்.14 காதலர் தினம் என்று சொல்லப் படும் இன்றைய தினத்தில் வெளியாகும் படம் ஒரு ஆடார் லவ். இதில் வரும் ஒரு பாடல் மானிக்ய மலராய பூவி… இந்தப் பாடலில் கண் ஜாடை காட்டி நடித்து பலரின் கைதட்டல்களைப் பெற்று ரசிகர் கூட்டத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளார் இதில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியர் என்ற +2 மாணவி.

சமூக வலைத்தளங்களில், வெறும் அரை நிமிடமே வரக்கூடிய இந்தக் காட்சியும் கண் ஜாடைகளும் பெரும் வரவேற்புடன் வைரலாகி வரும் நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய குழு புதன்கிழமை இன்று ஒரு புகாரை பதிவு செய்துள்ளது. ஹைதரபாத்தில் உள்ள ஃபலக்னுமா காவல் நிலையத்தில் அவர்கள் அளித்துள்ள புகாரில், மாணிக்ய மலராய பூவி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் படும்போது அது நபியை அவமதிப்பதாக உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் புகார் இதுவரை பதிவு செய்யப் படவில்லை.

ஷான் ரஹ்மான் என்பவரால் கம்போஸ் செய்யப்பட்ட இந்த வீடியோ இப்போது இணைய உலகில் அதிகம் கோலோச்சும் வீடியோவாக உள்ளது. நடித்த ப்ரியா ப்ரகாஷ் வாரியர் புகழின் உச்சிக்கே சென்றுள்ளார்.