அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 40பேர்க்கு சிகிச்சை…

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்
பிரியாணி சாப்பிட்டு நேற்று 27 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் நேற்று அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்த நிலையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு ஒரு மாணவி பலியான நிலையில்
தமிழகத்திலும் பகீர் கிளப்பி வருகிறது இந்த ஷவர்மா.
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கால்நடை கல்லூரி மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரியாணி ஷவர்மா கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தி சுகாதார மற்ற முறையில் தயரான பழைய,கெட்டுப்போன சிக்கன்கறி பிரியாணி ஷவர்மா போன்ற உணவுகளை பறிமுதல் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

unnamed - 2026

Related articles

Recent articles

spot_img