மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏற்பட்ட தகராறில் நடத்துனர் மீது நடத்திய தாக்குதலில் பெருமாள் என்பவர் உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசுப்பேருந்தில் மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்து நடத்துனர் பெருமாள் மற்றும் பயணி ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த பயணி நடத்துனரை தாக்கியதில் நடத்துனர் காயமடைந்தார்.
படுகாயமடைந்த பேருந்து நடத்துனரை மேல்மருவத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். நடத்துனரை தாக்கிய பயணி மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நடத்துனரை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
