தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று முதல் முழு ஆண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு விடுமுறை இன்று முதல் தொடங்கும் நிலையில் பள்ளிகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்த உடன் அடுத்த மாதம் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் 1 முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தற்போது தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 13ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் , புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
