தங்கம் விலை ஏறுவதுபோல் தக்காளி விலை சமீப நாட்களாக உயர்ந்து வருவது மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், 2 வாரங்களுக்கு முன், 1 கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மொத்த விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 70 ரூபாயாகவும், சில்லறை விற்பனையில் கிலோவுக்கு 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்த நிலையில் தமிழக உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ68ஆக விலை நிலவியது.
