பிரபல டிவி‌ சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

Published:

balabi padel - 2026

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல வங்காள மொழி டிவி நடிகை பல்லபி டேய்.

இவர் தற்போது கொல்கத்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய ஆண் நண்பரோடு வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பல்லபி டேய் வீட்டில் உள்ள படுக்கை அறையில் திடீரென தூக்கில் தொங்கி உள்ளார். இதைப் பார்த்த அவருடைய ஆண் நண்பர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img