சென்னையில் மெரினா கடற்கரையில் சாராயம் விற்பனை..

Published:

சென்னையில் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே மணலில் பதுக்கி சாராயம் விற்ற மூன்று பெண்களை போலீசார் கைதுசெய்து நூறு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்துவைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்த 32 லிட்டர் சாராய பாட்டில்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் கூறும்போது, ஆந்திராவில் இருந்து சாராயங்களை கொள்முதல் செய்து ரயில் மூலம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மெரினாவிற்கு கொண்டு வந்ததாகவும், அங்கு மணற்பகுதியில் மறைத்துவைத்து சிறு பாட்டில்களில் ஊற்றி விற்பனை செய்துவந்ததாக தெரிவித்தனர். மேலும் 100 லிட்டர் சாராயம் மண்ணில் மறைத்துவைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் படி போலீசார் மெரினா கடற்கரையில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டும் போது 2 லிட்டர் பாட்டில்களில் சாராயங்கள் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய போலீசார், காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். வேறு எங்கும் இதே போல சாராய பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதான் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
mcms 1 1 - 2026
images 39 1 - 2026
images 40 2 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img