பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்
அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது.
அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.
அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.