கேரளா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கேரளாவில் கொல்லம் திருவனந்தபுரம் மாவட்ட வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், சிவகிரி, தென்காசி, ஆய்க்குடி,உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதோடு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து வனப் பகுதிகளில் மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இன்றும் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மிக அதிகமாக வந்தனர்.
அதே நேரம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மெயினருவியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் இன்று காலை மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
மழையால் மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு மற்றும் மிகப்பெரிய அணையான அடவிநயினார் ஆகிய அணைகளில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.