
இணையத்தில் பரவியுள்ள வீடியோ ஒன்றில் சில எலிக்குட்டிகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வேகமாக அவற்றிற்கான உணவை அழகாகி கொறித்து உண்ணுகின்றன.
பெரும்பாலும் எலிகள் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை கடித்து நாசம் செய்துவிடும், அதனால் பலருக்கும் எலிகளை பார்த்தாலே பிடிக்காது. ஆனால் இந்த காணொளியில் காணப்படும் எலிகளோ பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.
சமூக வலைத்தளமான ட்விட்டரில், பைடெங்பைடென் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த கியூட்டான வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.
அந்த வீடியோவில், ஒரு சுவற்றின் மீது ஆறு அழகிய எலிக்குட்டிகள் வரிசையாக அமர்ந்து இருக்கின்றன, அதில் இரண்டு எலிகள் வெள்ளை மற்றும் பழுப்பு கலந்த நிறத்திலும், மற்ற நான்கு எலிகள் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.
அதில் நான்கு எலிகளுக்கு உணவு கிடைத்துவிட்டது, அந்த உணவை அவை வேகமாக நின்றுகொண்டு இருக்கும்போது மற்ற இரண்டு எலிகள் வேகமாக அவை திண்பதை பிடுங்கி திங்க முயல்கின்றன.
பின்னர் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு எலியின் வாயில் இருக்கும் உணவையும் பறிக்க முயல்கின்றன.
இந்த காட்சி ரசிக்கும்படியாக அமைந்து இருக்கிறது, இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை முப்பத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
மேலும் இந்த வீடியோவை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் லைக் செய்தும், பலர் இந்த வீடியோவை பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
Can’t stop watching.. 😅 pic.twitter.com/aXtU5sYy97
— Buitengebieden (@buitengebieden) May 16, 2022