தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, குமரி, தென்காசி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
