பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
