பெட்ரோல் டீசல் விலை குறைப்போடு உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்றும் சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் உஜ்வாலா கேஸ் சிலிண்டர் விலைகுறைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.