ஊட்டியில் மலர் கண்காட்சியில் பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
மலர் கண்காட்சி முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி இன்று சரிந்து விழுந்தது.
இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சி மை துவங்கி வைத்த நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
