இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம்
என நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
பேரறிவாளன் விஷயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு எடுத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் பேரறிவாளனை கட்டி அணைப்பதெல்லாம் தமிழகத்திற்கும் நல்லதல்ல தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.
மேலும் அவர் கூறுகையில் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பின்னர் தமிழகத்தில் இடம் இல்லை என்று கூறினார். அதே போன்று தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு, தேர்தலில் ஜெயித்து ஓராண்டிற்கு பின் தற்போது தமிழகத்தில் பணம் இல்லை என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கூறியுள்ளார். இது பழைய தேர்தல் அறிக்கையை நினைவு படுத்துகிறது. இனி நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு, `தானொரு அமைச்சர் என்பதே தனக்கு இப்போதுதான் நினைவுக்கு வருகின்றது’ என்று கூறுவார்” என விமர்சித்தார்.