எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு இரயில் சேவை
(வண்டி எண்: 06035/06036) கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மேலும் ஒரு புதிய சிறப்பு இரயில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06035)
04-ஜூன்-22 முதல் 06-ஆகஸ்ட்-22 வரையும் ,சனிக்கிழமை தோறும் பகல் 12.35க்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு
வேளாங்கண்ணி வருகை ஞாயிற்றுக்கிழமை காலை 05:50 க்கு இருக்கும்.
வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06036)
05-ஜூன்-22 முதல் 07-ஆகஸ்ட்-22 வரை யும் மானாமதுரை ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழி இயக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி மாலை 06:30 ஞாயிறு தோறும் புறப்பட்டு கொல்லம் வருகை திங்கள்கிழமை காலை 08:20
கோட்டயம் வருகை: காலை 10:20
எர்ணாகுளம் வருகை: பகல் 12:00 திங்கள் தோறும் வந்தடையும்.
ஏற்கனவே கொரோனாவுக்கு முன்பே இந்த ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு தமிழகம் கேரளா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது இந்த ரயில் மீண்டும் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது பயணிகள் இந்த சிறப்பு இரயில் சேவையைப் பயன்படுத்திக் கொண்டால் இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.