முதல் முறையாக மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, மேட்டூர் அணை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும். அதேநேரம் அணையின் நீர்இருப்பை பொறுத்து நீர் திறப்பு தேதி மாறுபடும்.அணை வரலாற்றில் கடந்த 88 ஆண்டுகளில் இதுவரை 18 முறை குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 முறை ஜூன் 12-ம் தேதிக்கு முன்னர் நீர் திறக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் கடந்த 1947-ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், முன்கூட்டியே இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.