பலத்த இழுபறிக்குப்பின் குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டார்.
3வது முறையாக நடைபெற்ற குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றார்.
250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று தேர்வு பெற்றார். திமுக கவுன்சிலர் பாண்டியன் 3 வாக்குகள் பெற்றார்
குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது
துணை தலைவர்களுக்கான தேர்தல் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்.
