
காலங்காலமாக இன்றும் குழந்தைகளின் பேவரைட் கதையாக இருப்பது காக்கா வடை திருடும் கதை. இந்த கதையை வைத்தே பல குழந்தைகளை உறங்க வைப்பது, வேடிக்கை காட்டுவதும் பெற்றோரின் பொழுதுபோக்காக உள்ளது.
வீடியோவில் வடைக்கு பதில் முட்டையை திருடுகிறது காக்கா. அந்த வீடியோவில் கடை ஒன்றிக்கு வரும் காக்கா சரியாக முட்டை பாக்ஸ் வைத்திருக்கும் இடத்துக்கு செல்கிறது. முட்டை மேல் இருக்கும் அட்டையை தள்ளிவிட்டுவிட்டு முட்டையை மட்டும் திருடிச் செல்கிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவை பார்த்து ரசிக்கும் நெட்டிசன்கள், ‘வடையை சுடும்போதே கைது பண்ணியிருக்கனும், அப்போது விட்டதால் இப்போது முட்டையில் வந்து நிற்கிறது’ என கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளனர்.
வடை திருடும்போதே கைது பண்ணியிருக்கனும். இப்ப பாருங்க முட்டையில வந்து நிக்குது!!! 😃 pic.twitter.com/fS4pUuNBVR
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை ஆட்டோ கபீர் (@Autokabeer) May 26, 2022