Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில்  கனமழை..?!

தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில்  கனமழை..?!

தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவருகிற 7ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்  சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில்
 பெரம்பலூர் (பெரம்பலூர்) 4, கெட்டி (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 3, செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

03.06.2022, 04.06.2022: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று  மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு   40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.07.06.2022: தென் கிழக்கு  மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரளா – கர்நாடகா  கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது