To Read it in other Indian languages…

Home சற்றுமுன் இந்தோ-திபெத் எல்லைப்படையினர் 24 ஆயிரம் அடி உயர இமயமலை சிகரத்தில் ஏறி யோகா செய்து...

இந்தோ-திபெத் எல்லைப்படையினர் 24 ஆயிரம் அடி உயர இமயமலை சிகரத்தில் ஏறி யோகா செய்து சாதனை..

உத்ரகாண்ட் இமயமலை பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப்படை ஐடிபிபி போலீஸார்  24 ஆயிரம் அடி உயர சிகரத்தில் ஏறி யோகா பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஐடிபிபி சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஐடிபிபியின் மலையேற்றத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் குழு, கடல் மட்டத்திலிருந்து 22,850 அடி உயரத்தில் உள்ள மலை மீது யோகா பயிற்சி பற்றி செயல் விளக்கம் அளிக்கின்றனர். வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஐடிபிபி வீரர்கள் குழுவினர் 24,131 அடி உயரம் உள்ள அபி காமின் சிகரம் மீது ஏறி ‘பத்ரி விஷால் கி ஜே’ என கோஷமிட்டனர்.

இத்துடன் ஐடிபிபி குழுவினர் 230-க்கும் மேற்பட்ட முறை வெற்றிகரமாக மலையேறி சாதனை படைத்துள்ளனர். மத்திய இமயமலை பகுதியில் அபி காமின் சிகரம் அமைந்துள்ளது. இது காமெத் சிகரத்துக்கு அடுத்தபடியாக 2-வதுஉயரமான சிகரம் ஆகும்.

கடந்த 1962-ல் உருவாக்கப்பட்ட ஐடிபிபி படையின் மலையேற்றப் பிரிவினர் 1960-களின் இறுதியில் இமயமலையில் ஏறத் தொடங்கினர். ஒரே ஆண்டில் 9 சிகரங்களில் ஏறி சாதனை படைத்தனர். இமயமலைத் தொடரின் பல்வேறு கடினமான சிகரங்களில் இப்படைப் பிரிவினர் ஏறி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்தோ-திபெத் எல்லை படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்கு சென்று இந்தோ-திபெத் எல்லை படையின் மலையேற்ற வீரர்கள் யோகா பயிற்சி செய்துள்ளனர். இது வீரர்களின் ஓர் அரிய முயற்சியாகும்.

இதற்கு முன்பு இவ்வளவு உயரத்திற்கு சென்று யோகா பயிற்சியை மேற்கொண்டு யாரையும் பார்த்தது இல்லை. இது தனித்துவம் வாய்ந்த சாதனை என தெரிவித்து உள்ளது.

மனித இனத்திற்கான யோகா என சர்வதேச யோகா தினத்திற்கான நடப்பு ஆண்டு கருப்பொருள் ஆக கூறப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு யோகாசனங்களை செய்து மக்கள் கட்டுடலுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற செய்தியை கூறுவதற்காக மிக அதிக உயரத்தில் அவர்கள் யோகா பயிற்சியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.