சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் நகை வாங்கும் பலர் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
கடந்த ஜூன் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனையானது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் மறுநாளான ஜூன் 2ம் தேதி தங்கம் விலை ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,080 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 200- ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, 4,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, 38,080 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 67.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
