பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று (8ம் தேதி)மாலை திறக்கப்பட்டது.
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருட பிரதிஷ்டை தினம் நாளை ஜூன் 9ம் தேதி ஆகும். இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார்.
இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இரவு நடை அடைக்கப்பட்டது.நாளை 9ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் பிரதிஷ்டை தின அபிஷேகம் பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படும். 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
