திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல் பன்னையூர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கனவின் கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்கள் .
திருவாடானை அருகே பாசானி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ( 50 )அவரது மனைவி சிநேகவல்லி (45) ஆகிய இருவரும் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் பாசாணி கிராமத்திலிருந்து ஆர்.எஸ் .மங்கலம் அருகே உள்ள அளவிடங்கான் கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு ஞாயிற்று கிழமை அதிகாலை சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அண்ணாதுரையும் அவரது மனைவி சினே வல்லியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் தகவலறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
