தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராகவும்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன்- புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனராகவும்,புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் – போக்குவரத்து துறை கமிஷனராகவும்,வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும்,தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ்-வணிகவரித்துறை இணை கமிஷனராகவும் ,தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா- வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனராகவும்,திருச்சி கலெக்டர் சிவராசு-கோவை, வணிகவரித்துறை இணை கமிஷனராகவும்,மிகவும் பிற்படுத்த