தருமபுரி அருகே மாதேஅள்ளி கோயில் திருவிழாவில் தேர் சரிந்து 2 பேர் பலி..

Published:

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் தேர்த்திருவிழாவின் போது திடீரென தேர் கவிழ்ந்தது. அப்போது தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் விபத்தில பலத்த காயமடைந்த ஒருசிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

விபத்தில் படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News large 3052303 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img