நீலகிரி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலு இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், சாலையில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மதியத்துக்கு பிறகு வானிலை மேகமூட்டமாக மாறியது. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், சாலையில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரம் நிறுத்தப்பட்டிரு