தேனி அருகே காபியில் மயக்கபொடி கலந்து 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திரைப்பட இயக்குனரை போலீசார் தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் கென்னடி(47). குறும்பட இயக்குனரான இவர் தேனியில் படப்பிடிப்புக்காக வந்தார். அப்போது தனது படத்தில் நடிப்பதற்கு சிறுமிகள் தேவை என்று விளம்பரம் செய்தார். சினிமா ஏஜெண்டாக இருந்த ராக்கம்மா என்பவர் மூலம் அதேபகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறவே அடிக்கடி கென்னடி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது மகளான 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியையும் காபியில் மயக்கபொடி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தபோது பலமுறை இதேபோல கென்னடி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். வீட்டிற்கு வரவழைத்தும், வெளியில் அழைத்துச்சென்றும் தனது மகளை தாயே சீரழித்தார். இதனைதொடர்ந்து விடுமுறைக்காக சிறுமி சென்னைக்கு சென்றார். அப்போது தனது சித்தியிடம் நடந்த கொடுமைகளை எடுத்து கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியின் தாயை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கென்னடியை தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
