- பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.
- ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து ஸ்வப்னா சுரேஷ் அன்மையில் கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.இதனை முதல் மந்திரி பினராயி விஜயன் மறுத்தார்.இந்த நிலையில் பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.
இத்திட்டத்திற்கு ஷார்ஜா அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இத்திட்டம் நிறைவேறவில்லை என ஸ்வப்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியி னரின் போராட்டமும் தீவிரம் அடைந்துள்ளது.
