இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் புதிதாக 12,847 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
நேற்று பாதிப்பு 12,213 ஆக இருந்தது. இந்தநிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 4,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 3,419 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் 1,323, கர்நாடகாவில் 833, அரியானாவில் 625, தமிழ்நாட்டில் 552, உத்தரபிரதேசத்தில் 413, தெலுங்கானாவில் 285, மேற்கு வங்கத்தில் 198, ராஜஸ்தானில் 115, கோவாவில் 112 பேர் புதிதாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,985 பேர் நலம் பெற்றனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 82 ஆயிரத்து 697 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 63,063 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 4,848 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 14 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 8 மரணங்கள் அடங்கும். இதுதவிர நேற்று மகாராஷ்டிராவில் 3, டெல்லியில் 2, கர்நாடகாவில் ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,817 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 15,27,365 டோஸ்களும், இதுவரை 195 கோடியே 84 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 85.69 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 5,19,903 மாதிரிகள் அடங்கும்.
