டெல்லியில் பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டத்தின் முக்கிய சுரங்கப்பாதை மற்றும் ஐந்து பாதாள சாலைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் ரூ.920 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு இடையூறு இல்லாத மற்றும் சுமூகமான அணுகலை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் நநேர்திர மோடி உரையாற்றியதாவது,
டெல்லி பிரகதி மைதான் வழித்தட திட்டம் கொண்டுவருவதற்குள் கொரோனா உள்பட பல தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கிடையே, நீதித்துறையின் கதவைத் தட்டி, அத்தகைய திட்டங்களின் செயல்முறையை சீர்குலைக்கும் நபர்களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. இருப்பினும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல சதாப்தங்களுக்கு முன் உருவான பிரகதி மைதானத்தின் ‘பிரகதி’ அதிகம் இல்லை. அது கைவிடப்பட்டது. காகிதத்தில் வளர்ச்சித் திட்டம் இருந்தது. அப்போதைய அரசு செய்தித்தாள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் வகையில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
