- Ads -
Home சற்றுமுன் அதிமுக ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? பொதுக்குழுவே முடிவு செய்யும்-

அதிமுக ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? பொதுக்குழுவே முடிவு செய்யும்-

அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டுவர சட்டத்தில் இடம் உள்ளது என்றும் தலைமையை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்பதுரை கூறியதாவது,

அதிமு கழகத்தை வழி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக் குழு. 5 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் கூறப்படவில்லை. கழகத்தின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்தி பொதுக்குழுவின் அதிகாரத்தின் மூலம் மாற்றுவதற்கு உரிமை உள்ளது.

அதிமுகவுக்கு என்று சட்ட புத்தகம் உள்ளது. அந்த சட்ட புத்தகத்தில் பொதுக்குழுவுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும், பதவியில் இருந்து நீக்கியதும் பொதுக்குழுதான். அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு சென்றால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் தலைவர் ஆக்கிக்கொள்ளுங்கள். அதற்கான கட்சி விதிகளை காட்டுங்கள் என்று மட்டும் தான் கேட்பார்கள். அதனால் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு சட்ட விதிகளில் இடம் இருக்கிறது . அதிமுகவின் சட்ட விதிகளின்படி ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்பது குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  பரணி மகா தீபத்துக்கு இத்தனை பேர் தான் அனுமதியாம்!
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version