தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவுக்கு ‘இஸட் பிளஸ்’’ பிரிவு பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது .திரௌபதி முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்: போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற முதியவர் கோர்ட்டில் தற்கொலை முயற்சி இதுதொடர்பாக மோடி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சமூகத்துக்காகவும், ஏழை, அடித்தட்டு, விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் முர்மு. நல்ல நிர்வாக அனுபவத்தைப் பெற்றவரான அவர் கவர்னராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். கொள்கை விஷயங்கள் குறித்த முர்முவின் புரிதலும், அவரின் இரக்கத்தன்மையும் நம் நாட்டுக்கு பெரிதும் பயனளிக்கும். நம் நாட்டின் மிகச் சிறந்த ஜனாதிபதியாக திரவுபதி முர்மு திகழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவுக்கு ‘இஸட் பிளஸ்’’ பிரிவு பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) போட்டியிடுவார் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றின் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
குடியரசுத் தலைவராக முர்மு தேர்வானால் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
இந்நிலையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட் பிளஸ்’’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.
