- Ads -
Home சற்றுமுன் தமிழ்நாட்டில் 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள்..

தமிழ்நாட்டில் 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள்..

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக நியமனம் செய்யப்படும் இந்த பணியிடங்கள் முற்றிலுமாக தற்காலிகமானவை என்றும் இவர்களுக்கு மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ,பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்வதற்கும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும் இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாடஹ் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதம் ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது.

ALSO READ:  தேசமே முதன்மை - என்ற உணர்வுடன் செயல்படும் அரசு: பிரதமர் மோடி உரை!
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version