தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு(64) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று வியாழக்கிழமை தில்லி வந்தவர் பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முன் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹ வருகிற ஜுன் 27 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.