மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த மொத்தம் 343 அணிகள் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளன.
மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது., இதில் பங்கேற்க பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் பங்கேற்க இருப்பது தற்போது உறுதி ஆகி உள்ளது. இதில் 188 நாடுகளை சேர்ந்த மொத்தம் 343 அணிகள் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளன. ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு ஒரு கேப்டன், இரு குழுவை ஒருங்கிணைக்க ஒரு தலைவர் என்ற கணக்கில், ஒரு அணியில் 13 பேர் இடம் பெறுகிறார்கள். பதிவு செய்துள்ள நாடுகளின் தூதர்கள், அதிகாரிகள், வீரர்கள் போட்டி நடக்கும் இடத்தை பார்க்க வரக்கூடும் என்பதால், மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஓட்டல் மாடியில் உள்ள செஸ் ஒலிம்பியாட் அலுவலகத்தின் வரவேற்பு அறை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. காத்திருக்கும் இடம், பொதுக் கூடம், ஆலோசனை பகுதி, நுழைவு வாயில் என அனைத்து இடங்களிலும் செஸ் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் செஸ் போர்டுகள் வைத்து அலங்காரம் செய்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 188 நாடுகளில் இருந்து 343 அணிகள் பங்கேற்க பதிவு செய்து உள்ளன. ஒரு அணியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அணியில் தலைவர் உள்பட 13 பேர் இடம்பெறுவார்கள் என்றார்.