ஈரானின் தென்மேற்கில் உள்ள பந்தர்அப்பாஸ் நகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும்பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.